போடியில் சட்டவிரோத மது விற்பனை.. பெண் கைது

போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த விஜயா (65) என்பவர் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விஜயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோந்து பணியின்போது போலீஸாருக்கு இந்த தகவல் கிடைத்தது.

தொடர்புடைய செய்தி