தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), வேன் ஓட்டுநர். இவரது மனைவி லோகேஸ்வரி (21). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என கிருஷ்ணமூர்த்தி மனவேதனையில் இருந்துள்ளார். இதனால், வீட்டுமாடியில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.