தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பெட்டிக்கடையைத் திறந்துப் பார்த்தபோது, கடையில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சுந்தர் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.