தேனி அருகே உள்ள பத்திரகாளிபுரத்தை சேர்ந்தவர் வெள்ளை சுப்பு. விவசாயி. இவரது மகன் ஆனந்தராஜ் (17 வயது). தனது தந்தையுடன் இணைந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தான். நேற்று (மார்ச் 23) தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சுவிட்சை போட முயன்றான். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அந்த சிறுவனை மீட்டு டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்தராஜ் இறந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.