தேனி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இன்று (ஜூன் 15) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த பருவமழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 60 அடியை எட்டிய நிலையில், விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். 

தொடர்ந்து அரசின் உத்தரவையடுத்து அமைச்சர் பெரியசாமி மதகை திறந்து வைத்தார். இன்று (ஜூன் 15) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல் 75 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதம் உள்ள 45 நாட்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.

தொடர்புடைய செய்தி