தேனி சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 51). மதுபான பார் ஊழியர். இவர் மனைவியுடன் தகராறு ஏற்பட்ட கடந்த ஆறு வருடங்களாக தனியே வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று தேனி அல்லிநகரம் அருகே புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பி மீது டூ வீலர் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.