தண்ணீர் எடுத்து வர மூதாட்டி வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் லலிதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றார்.
இது குறித்து லலிதா அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட காளியப்பன் (25) என்பவரை கைது செய்தனர்.