தேனி மாவட்டம், குள்ளப்புரத்தில் இருந்து வைகை அணை ரோடு வழியாக கேரளாவிற்கு உடைக்கற்கள் ஏற்றிக் கொண்ட லாரியை, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் வட்டாட்சியர் மருதுபாண்டி ஆகியோர் வாகன சோதனையின் போது மடக்கிப் பிடித்தனர். அனுமதிச்சீட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து விஏஓ ராஜ்குமார் புகாரில், ஜெயமங்களம் போலீசார் கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர்கள் ஜியோ (25 வயது), ராஜா (40வயது) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.