தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. கூலித்தொழிலாளி பலி

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் (மார்ச் 15) கரும்பு வெட்டும் பணிக்காக பயணிகள் ஆட்டோவில் மூலக்கடை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு தொழிலாளியும் வந்தார். கடமலைக்குண்டு அருகே மூலக்கடை பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி மற்றும் ஆட்டோ டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி