தேனி: இந்து வியாபாரிகள் சங்க அடையாள அட்டை வழங்கும் விழா

தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குமரேசன் பாண்டியன் தலைமையிலும் இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் அடையாள அட்டையினை வழங்கி சிறப்பித்தனர்.

 மேலும் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் உமையா ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ், இந்து முன்னணி தேனியின் நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று விழா ஒருங்கிணைப்பினை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி