தேனியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கு நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக கூறி தேனியை சேர்ந்த சுருளி, அவரது மனைவி லட்சுமி, சகோதரர்கள் வேல்முருகன், குமார் ஆகியோர் ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்தனர். இந்த கும்பல் மேலும் 7 பேரிடம் ரூ. 58 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த புகாரில் குற்றப்பிரிவு போலீசார் சுருளியை கைது செய்தனர்.