தேனி: தீ விபத்து.. பற்றி எரிந்த வீடு

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே செங்குளத்துப்பட்டியில் வியாழக்கிழமை அன்று ராஜேஸ்வரி என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவர் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக தேவதானபட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி