தேனி : தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

தேனி அருகே வடபுதுப்பட்டி பகுதியில், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சங்கம் சார்பில், "போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்வு" நடைபெற்றது. 

போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், மாணவியர்களிடம் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில், கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ராமுத்தாய் வரவேற்புரையாற்றினார். 

கல்லூரியின் செயலாளர் மாறன் மணி, கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசிலா சங்கர், உமா காந்தி, கிருஷ்ணவேணி, விடுதிக்காப்பாளர் உமா, மற்றும் கல்லூரி மாணவியர் ஆசிரியர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரியில் அகாடமிக் டீன் கோமதி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் நாகப்பிரியா நிகழ்வின் நிறைவாக நன்றி உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி