தேனி: தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் நேசம் தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த தையல் பயிற்சியில், 300 மணி நேரம் பயிற்சி பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற 37 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 31) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர் நலச் சங்க செயலாளர் அன்புக்கரசன், நேசம் தொண்டு நிறுவன செயல் இயக்குனர் நேசம் முருகன், மற்றும் சமூக ஆர்வலர்கள், தையல் பயிற்சி ஆசிரிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தையல் பயிற்சி நிறைவு செய்து சான்றிதழ்கள் பெற்ற பெண்கள் மனமகிழ்ச்சியுடன் சென்றனர். நிகழ்வின் நிறைவாக தையல் பயிற்சி ஆசிரியை ராதிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி