தேனி: பெண்ணுக்கு மிரட்டல்; இளைஞர் மீது வழக்குப்பதிவு

தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண் டெய்லர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், டெய்லரின் மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த பவானி சங்கர் (21 வயது) என்பவர் பெண் கேட்டு பிரச்சினை செய்து வந்தார். 

மகளுக்கு திருமண வயது பூர்த்தியாகாததால் 21 வயது ஆன பின் பேசிக் கொள்ளலாம் என தாய் கூறினார். இதனை மீறி இரவில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணின் தாயாரை தாக்கி வேறு யாருக்கும் பெண் தரக்கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் பவானி சங்கர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி