தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடியதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாமஸ் என்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தொழிற்சாலை பங்குதாரரான அப்துல்ஜலீல் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை பணியாளர்களான தாமஸ் மற்றும் கருப்பசாமி ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.