தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.