தேனியில் தந்தை திட்டியதால் மாணவன் மாயம்

தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜா (வயது 45). இவரது 14 வயது மகன் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தார். இதனால், அவரது தந்தை அவரை கண்டித்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அவரது மகன் மாயமானார். இதுகுறித்து பாண்டியராஜா, தேனி காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளிததுள்ளார். அந்த புகாரின் பேரில், தேனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி