தேனியில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன போஸ்டர்கள்

தேனி நகர் பகுதிகளில் தேனி தெற்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் கிங் விஜயகுமார் என்பவர் பா.ஜ.க. கட்சியின் அண்ணாமலைக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதில் "இந்த ஊர் நல்லா இருக்கணும், நாடு நல்லா இருக்கணும். 

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை எப்போது மணிப்பூர் கலவரம் மற்றும் ஜிஎஸ்டி விலை உயர்வுக்கு சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்?" என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன. போஸ்டர்களை தேனி நகரில் மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். இதனால் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி