குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும். 9-ஆவது ஊதிய மாற்றக் குழுவில் அரசு ஊழியர்களுடன் நியாய விலைக் கடை பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடை விற்பனை முனையத்தை பழுது நீக்கும் செலவை கடை விற்பனையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது. 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் போன்ற சிறப்புத் திட்ட செயலாக்கத்துக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்