பெரியகுளம் வட்டம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (அக்.,2) புதிய மன்ற அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மன்ற தலைவி சம்சுல்குதா தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஊராட்சி வளர்ச்சி பணிகள் பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து, சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்நிகழ்வில், ஊராட்சி செயலர் ஜெயபாண்டி தீர்மானங்களை வாசித்தார்.