மாணிக்கம் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை 31) காலை வீட்டைப் பூட்டிவிட்டு ஏலத்தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து, மதிய வேளையில் வீடு திரும்பும்போது, வீட்டுக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2.20 லட்சம் ரொக்கம், ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.