பெரியகுௗம்: தமிழ்நாடு அறிவியல் இயக்க சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஜேகே பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் "கம்பம் சந்திப்பு 24" என்கிற இலக்கியவாதிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், 'கேள்வி கேட்டு பழகு' என்கிற நூல் குறித்து சங்கரேஸ்வரி திறனாய்வு உரை வழங்கினார். 

இதேபோல், 'மதச்சார்பின்மை' என்கிற நூல் குறித்து முரளிதரன் திறனாய்வு உரை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் தேனி சுந்தர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி