பெரியகுளம் வடகரை அழகா்சாமிபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (21) குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து கடந்த 2-ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.