பெரியகுளம்: பேரூராட்சி கூட்டம்; 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் இன்று (ஜூலை 31) நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல் அலுவலர் முருகன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன், வார்டு உறுப்பினர்கள் வசந்தா, கோமதி, தேவகி உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து மன்றக் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் நிறைவாக, தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி