இந்த முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மின்சார வாரிய துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உரிமைத்துறை, உள்ளிட்ட 16 அரசு சேவை துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், உதவி திட்ட அலுவலர் விஜயா, பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். எம். பாண்டியன், மாநில மீனவர் நலவாரிய குழு உறுப்பினர் குள்ளப்புரம் முருகன், பெரியகுளம் ஒன்றியக் குழு முன்னாள் பெருந்தலைவர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, ராகவன், ஊராட்சி செயலர் முத்துச்செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் இந்த முகாமில், ஆர்வமுடன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.