பெரியகுளம்: தாயிடம் தகராறு செய்த மகன் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பட்டாபுளி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (70). இவருக்கும், இவரது மகன் கருப்பையா (43) என்பவருக்கும் இடையே வீட்டுப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால், கருப்பையா தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. முத்தம்மாள் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார் கருப்பையாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி