இதில் 115 க்கு - 106 என்ற புள்ளிகள் அடிப்படையில் தேனி எல்.எஸ்.மில் அணியை வீழ்த்தி கம்பம் பென்னிகுயிக் அணி வெற்றி வாகை சூடியது. முதலிடம் பிடித்த அணிக்கு 20,000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் வழங்கினார்.
தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 15,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த எல்.எஸ்.மில் அஸ்வின் அணிக்கு 10,000 ரூபாயும் மற்றும் நான்காம் இடம் பிடித்த பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணிக்கு 5,000 ரூபாயும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த விளையாட்டு வீரருக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.