தேனி மாவட்டம் பெரியகுளம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆண்டிபட்டிக்கு இயக்கப்படுகின்ற அரசு பேருந்து இன்று மாலை ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் வந்து கொண்டிருந்த போது திடீரென பெய்த மழையால் பஸ்ஸின் உள்பகுதியில் மழை நீர் சொட்டு சொட்டாக விழுந்தது. இதனால் பயணிகள் இருக்கையில் உட்கார முடியாமல் எழுந்து நின்று குடை பிடித்து பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது.