போடிநாயக்கனூர் அரசு கல்லூரியில் மர்மமாக இறந்த தனது மகன் சாவில் சந்தேகம் பெற்றோர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நிருந்தனர். தென்னெல்வேலி அண்ணாநகர் பர்கீட் மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் விக்னேஷ் (21). இவர் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதியில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.