தேனி: 18 வயதுக்கு கீழ் பிரசவத்திற்கு வந்தால் தகவல் அளிக்க உத்தரவு

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவ்வப்போது குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே 18 வயது நிரம்பாத சிறுமிகள் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனே சமூகநலத்துறை, குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி