பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் விஜயராகவன் (41). இவர் கடந்த 10-ஆம் தேதி தனது மகனின் காதணி விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கு கோட்டைப்பட்டியிலிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, ஜெயமங்கலம்-ஆண்டிபட்டி சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இவர் சென்ற இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.