தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி. புதூரை சேர்ந்த ஆண்டிச்சாமி. இவர் கைலாசபட்டி பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரம் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பி பட்டு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆண்டிச்சாமி பலியானார். இந்த நிலையில் இவர் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.