வீரபாண்டி நியாய விலை கடையில் ஆய்வு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 11) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ. பி. நந்தகுமார் தலைமையிலான குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வருகின்ற நியாய விலைக் கடையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி