தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி நல்லம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (38 வயது). லாரி டிரைவர். இவரது மனைவி சீமா மாலினி (34 வயது). கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று வேலைக்கு சென்ற சுரேஷ்குமார் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அக்கம் பக்கத்தில் அவர் குறித்து விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சீமா மாலினி தென்கரை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.