வீரபாண்டியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி போதுமணி (45), இவர் நேற்று முன்தினம் தனது ஒன்றரை வயது பேரனுடன் வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள், ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் நேற்று (ஜூன் 14) வழக்கு பதிவு செய்தனர்.