தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டு அறிந்தார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.