போடி அருகே கோழிகள் மர்மச்சாவு

தேனி மாவட்டம், போடி குலாலர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ராம் சந்திரா. இவர் தேவர் காலனியில் உள்ள நீலி படுகையில் தனது தோட்டத்தில் ஏராளமான கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு ஹரிராம் சந்திரா வந்தார். அங்கு 30-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது தொடர்பாக போடி நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதில் தனது உறவினர்கள் முன்விரோதம் காரணமாக கோழிகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்ததாகக் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி