பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பாலசுப்பிரமணியர் கோயிலில் உள்ள வராகநதி படித்துறையில் பேக்கின் மேல் செல்ஃபோன் மற்றும் 4,000 ரூபாய் பணத்தை வைத்துவிட்டு ஆற்றில் கால் கழுவிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூரியா, இவரது நண்பர் பிரகாஷ் இருவரும் செல்ஃபோன் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பிச் ஓடினர். இது குறித்து தென்கரை போலீசார் நேற்று (டிச. 28) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.