தேவதானப்பட்டியில் மரங்களை வெட்டியதாக 5 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவர் அவரது இடத்தில் தென்னை, முருங்கை, எலுமிச்சம் மரங்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், பாலமுருகன், மீனாட்சி, சுதா, ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து பாதையில் மரங்களை வைத்துள்ளதாக கூறி தகராறில் ஈடுபட்டு சில மரங்களை வெட்டி உள்ளனர். இதுகுறித்து 5 பேர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி