தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில், வருகிற 23-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.