தேனி மாவட்டம் போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போழுது சிலமலை சூலப்புரம் பகுதியில் உள்ள ஓடையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மண் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மணலுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மண் அள்ளியது தொடர்பாக சிலமலை மணியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.