போடி: புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர் கைது

தேனி மாவட்டம், போடி நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போடி டிவிகேகே நகர் பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, முருகசாமி (55 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி