போடி: அரசு விடுதி பெயரை அழித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள முத்தையன் செட்டிப்பட்டியில் அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு அரசு உத்தரவின்படி சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றப்பட்டது. அதற்கான பெயர்ப் பலகை ஒட்டப்பட்டுள்ளது. 

இந்தப் பெயர் பலகையில் சமூகநீதி விடுதி என்ற பெயரை அதே பகுதியைச் சேர்ந்த மாயி, திவான், சாம்சன், சுதாகர் மற்றும் சிலர் நேற்று முன்தினம் மைப்பூசி அழித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, விடுதி காப்பாளர் கோமதி அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி