உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனியில் உலக அமைதி குழு, நல்லோர் வட்டம், சோல்ஜர் அகாடமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தின. செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படும் இந்த தினத்தை ஒட்டி, தேனி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலம் சென்று பழைய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது.