தேனி அருகே பெண்ணிடம் பலாத்கார முயற்சி: 3 பேர் கைது

தேனியில் உள்ள சலூனில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஊழியர்களாக பணிபுரிகின்றனர். அந்த இரு பெண்களும் தங்களது ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வீரபாண்டி தடுப்பணை அருகே அமர்ந்திருந்தனர். 

அப்போது அங்கு சென்ற ஆட்டோ டிரைவர்களான விக்னேஷ், குணால், ஹரிஹரன் ஆகிய மூன்று பேரும், அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 29 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து இழுத்துச் சென்றுள்ளனர். 

அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின்பேரில், இரண்டு தனிப்படை போலீசார் விக்னேஷ் (27), குணால் (25), ஹரிஹரன் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி