ஆண்டிபட்டி: பள்ளியில் புலிகள் தின கொண்டாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் நேற்று முன்தினம் புலிகள் தினமும், நேற்று நண்பர்கள் தினமும் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி, பள்ளியின் செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோர் முன்னிலையில் கே.ஜி. மாணவர்கள் புலிகள் முகமூடி அணிந்து கொண்டாடினார்கள். 

பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி நண்பர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார். பள்ளியின் ஆலோசகர் பிரைசலின் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கையில் ராக்கி கட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, லதா, கவிதா, ராகினி, திவ்யா, பானுப்பிரியா, தெய்வ நிரஞ்சனா, தமிழ்ச்செல்வி உட்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி