தேனியில், குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற முனிராஜ் (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவம்பர் 20 அன்று இறந்த முனிராஜ், உயிர் பிரியும் தருவாயில் வீடியோ பதிவில் தனது மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து தெரிவித்து தந்தைக்கு அனுப்பியுள்ளார். முனிராஜின் தந்தை நல்லபெருமாள், மகனின் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.