தேனி மாவட்டத்தில் பல்வேறு விதி மீறல்கள் காரணமாக ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட 381 விபத்துகளில் ஆண்கள் 303, பெண்கள் 47, சிறுவர்கள் 13, சிறுமிகள் 4 பேர் என மொத்தம் 395 பேர் பலியாகி உள்ளனர். இனிவரும் காலங்களில் வாகனங்களை கவனமாக இயக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் அறிவுறுத்தி உள்ளார்.