பெரியகுளம் தாலுகா, தாமரைகுளம் பிட் 1 பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் சிறப்பு திட்டத்தில் பொதுமக்கள் 1000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. எனவே நத்தம் புல எண் 3083-ல் வீடுகள் கட்டி குடியிருக்கும் பொதுமக்கள் நில அளவை பணி செய்ய வரும் அலுவலரிடம் உரிய ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.